பயணிகள் பேருந்து, 2 TRELER லாரிகள், விபத்து! உயிர் தப்பிய 46 பேர்! 6 பேர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 May, 2025
மே 5,
இன்று அதிகாலை 46 பயணிகளுடன் பயணித்த விரைவுப் பேருந்து மெர்சிங் சாலையில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக விபத்தில் 2 TRELER லாரிகளும் Perodua Alza வாகனமும் சம்மந்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை 5.38 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Samsuri Shafai தெரிவித்தார்.
2 TRELER லாரி ஓரட்டுநர்களும் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் பேருந்து ஓட்டுநரும் Perodua Alza வாகனத்தில் பயணித்த 3 ஆண்கள் 1 பெண்ணும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 46 பயணிகளும் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாக மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Samsuri Shafai தெரிவித்தார். இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Samsuri Shafai உறுதிப்படுத்தினார்.
Sebuah bas ekspres yang membawa 46 penumpang terlibat dalam kemalangan awal pagi tadi di Jalan Mersing bersama dua treler dan sebuah Perodua Alza. Enam individu cedera, termasuk pemandu-pemandu dan penumpang Alza, manakala penumpang bas terselamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *