நேரெதிரே மோதிய வாகனங்கள்! முதியவர் பலி! மற்றொருவர் காயம்!

- Sangeetha K Loganathan
- 05 May, 2025
மே 5,
கட்டுப்பாட்டை இழந்த Toyota Estima ரக வாகனம் எதிரில் வந்த Toyota Camry ரக வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் Toyota Camry வாகனமோட்டியான 62 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 11.49 மணிக்கு மெர்சிங்கிலிருந்து கோத்தா திங்கி செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஜொகூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Anuar Hussein தெரிவித்தார்.
விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 9 மீட்பு அதிகாரிகளைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட இரு வாகனமோட்டிகளையும் மீட்டதாகவும் Toyota Camry வாகனமோட்டி வாகனத்திலேயே சிக்கி உயிரிழந்ததகவும் Toyota Estima வாகனமோட்டியான 50 வயது ஆடவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் ஜொகூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Anuar Hussein தெரிவித்தார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில் உயிரிழந்த 62 வயது முதியவரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக மெர்சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kemalangan antara dua kenderaan di jalan Mersing-Kota Tinggi menyebabkan seorang warga emas berusia 62 tahun maut di tempat kejadian, manakala pemandu Toyota Estima cedera ringan. Kemalangan berlaku selepas kenderaan hilang kawalan dan memasuki laluan bertentangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *