மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஆடவர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 03 May, 2025
மே 3,
நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது சக நண்பரின் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகவும் மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். 31 வயது Mohamad Faizal Adam Azhar எனும் அந்நபர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் மூவரின் மோட்டார் சைக்கிள்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காலை 8.45 மணிக்குக் கிழக்கு கடற்கரை சாலையின் கோலா திரங்கானு அருகில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் படுகாயம் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
Seorang lelaki maut manakala dua lagi cedera dalam kemalangan motosikal melibatkan tiga sahabat di Kuala Terengganu. Mangsa berusia 31 tahun meninggal di tempat kejadian akibat kecederaan parah di kepala selepas motosikal mereka berlanggar sesama sendiri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *