மரத்தில் மோதிய கார்! பெண் ஓட்டுநர் படுகாயம்!

top-news

மே 4,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 40 வயது பெண் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மாலை 3.36 மணியளவில் சிரம்பானில் உள்ள Vision Homes சாலையில் MYVI ரக வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றது மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிரம்பான் மாவட்ட மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Mohammed Gadaffi bin Abd Manaf தெரிவித்தார்.

மரத்தில் மோதிய வாகனத்தினுள் சிக்கியிருந்த 40 வயது பெண் ஓட்டுநரைச் சிறப்பு இயந்திரங்களைக் கொண்டு மீட்டதாகவும் மாலை 4.16 மணிக்குப் பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிரம்பான் மாவட்ட மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Mohammed Gadaffi bin Abd Manaf தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang wanita berusia 40 tahun cedera parah selepas kereta dipandunya merempuh sebatang pokok di Seremban. Pasukan penyelamat menggunakan peralatan khas untuk mengeluarkannya dari kenderaan sebelum dikejarkan ke hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *