சட்டவிரோதமாக இயங்கிய 8 தொழிற்சாலைகள்! 31 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியது மட்டுமின்றி தொழிற்சாலைகளையும் அமைத்து மரங்களைத் திருடி 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளாந்தான் மாநில வனத்துறையினர் நேற்று மேற்கொண்ட சோதனையில் Pasir Mas, Tanah Merah, Tumpat, Jeli ஆகிய மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளி நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக 8 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட 8 தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக மூடியதுடன் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் 11 பேர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து RM 31.21 மில்லியனுக்கும் மேலான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lapan kilang haram yang beroperasi dalam hutan simpan di Kelantan telah ditutup, dan 31 individu termasuk 11 warga Myanmar ditahan atas kesalahan mencuri dan memproses kayu secara haram. Peralatan bernilai lebih RM31 juta turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *