தீயில் கருகிய கடை வளாகம்!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
2 மாடிகள் கொண்ட கடை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்மந்தப்பட்ட கடை முழுமையாகத் தீயில் கருகியது. நண்பகல் 12.24 மணிக்குத் தீ விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் 11 தீயணைப்பு வீரர்களுடன் குளுவாங்கில் உள்ள Taman Sam Hoe பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட கடைக்கு விரைந்ததாக குளுவாங் மாவட்டத் தீயணைப்பு ஆணைய இயக்குநர் Mohd Fauzi Md Nor தெரிவித்தார்.
வளாகத்தின் மேல்தளத்தில் கடை ஊழியர் ஒருவர் வெளியேற முடியாமல் சிக்கியிருந்ததாகவும் உரிய நேரத்தில் சம்மந்தப்பட்ட நபரைத் தீயணைப்பு மீட்பு அதிகாரிகள் மீட்டதாகவும் Mohd Fauzi Md Nor தெரிவித்தார். பிற்பகல் 1.46 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Mohd Fauzi Md Nor உறுதிப்படுத்தினார். தடயவியல் நிபுணர்கள் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah kedai di bangunan dua tingkat di Taman Sam Hoe, Kluang, musnah dalam kebakaran. Seorang pekerja yang terperangkap berjaya diselamatkan pasukan bomba. Kebakaran dikawal sepenuhnya dan tiada kecederaan dilaporkan. Siasatan masih dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *