இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருந்துளை!

- Muthu Kumar
- 18 Apr, 2025
இந்தியாவின் ஆர்யபட்னா விஞ்ஞானிகள் கருந்துளை ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.கடலில் ஒரு சிறிய குண்டூசியை போட்டுவிட்டு தேடும் கதைதான் கருந்துளையை தேடுவது. இருப்பினும் இந்திய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்த கருந்துளை பூமியிருந்து 4.2 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. அதாவது ஒளியின் வேகத்தில் பயணித்தால் இந்த கருந்துளையை சென்றடைய 4.2 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும்.
நாம் வாழும் பூமி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம். ஆனால் அதைவிட பெரிய பெரிய ரகசியங்கள் எல்லாம் இங்கு இருக்கின்றன. குறிப்பாக கருந்துளை பற்றி நாம் மேலும் அதிகமான விஷயத்தை தெரிந்துக்கொள்ளும்போது அறிவியல் துறையில் நாம் ஓரடி மேலும் முன்னோக்கி வைக்கிறோம். சூரியன் தனது இறுதி காலத்தில் வெடித்து சிதறும். அப்படி நடக்கும்போது அது கருந்துளைகளாக மாறுகிறது.
கருப்பு நிறத்தில் இருக்கும் துளைகள். இருட்டாக இருந்தால் லைட் அடித்து பார்க்கலாமே என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இந்த துளைக்குள் ஒளி சென்றால் வெளியே வராது. ஒளி பொருட்கள் மீது பட்டு எதிரொலித்தால்தான் அதை நாம் பார்க்க முடியும். ஆனால் இந்த துளையில் ஒளி மாட்டிக்கொண்டால் அதனால் வெளியே வர முடியாது. எனவேதான் இந்த துளை இன்னமும் இருளாகவே இருக்கிறது.
பூமியை விட அளவில் 1000 மடங்கு சிறியதாக இருக்கும் கருந்துளை கூட, பூமியை விட பல ஆயிரம் மடங்கு அதிக எடையை கொண்டதாக இருக்கும். ஒரு சேலையை நான்கு பக்கங்களில் பிடித்துக்கொண்டு கனமான இரும்பு உருண்டையை நடுவில் போட்டால் பள்ளம் உருவாகுமே அப்படித்தான் விண்வெளியில் இந்த துளைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த துளையின் முடிவில் என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியாது.
சில விஞ்ஞானிகளோ, கருந்துளையை பயன்படுத்தி காலப்பயணம் செய்யலாம் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியாது. இப்படி கருந்துளைகள் பற்றி ஆய்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கையில் இந்தியாவிலிருக்கும் விஞ்ஞானிகள் புதியதாக கருந்துளையை கண்டுபிடித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *