காரில் அடிபட்டு இறந்த கருஞ்சிறுத்தை! LPT2 சாலையில் பரிதாபம்

- Shan Siva
- 02 May, 2025
கோலாலம்பூர், மே 2: கிழக்கு கடற்கரை
விரைவுச்சாலை 2 (LPT2) Km387 நேற்று அதிகாலை காலை 19 வயது நபர் ஓட்டிச் சென்ற 4WD வாகனம் மோதியதில் ஒரு கருஞ்சிறுத்தை
உயிரிழந்தது.
வாகன ஓட்டுநர் கிளந்தானில் ருந்து திரெங்கானுவின் கெமாமன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது
அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உலு திரெங்கானு காவல்துறைத் தலைவர் Sharudin Abdul Wahab தெரிவி த்தார்.
பாதுகாக்கப்பட்ட
இனமான சிறுத்தை திடீரென சாலையின் குறுக்கே மோதியதாகவும், சரியான நேரத்தில் நிறுத்த முடியவில்லை என்றும் வாகன ஓட்டுநர் போலீசாரிடம்
தெரிவித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
அந்த விலங்கு
சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், ஓட்டுநருக்கு
எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
மேலும், சடலம் திரெங்கானு
வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் மேல் நடவடிக்கைக்காக
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக Sharudin கூறினார்.
LPT2 வழியாக பயணிக்கும்போது, குறிப்பாக இரவில், வாகனமோட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவும், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுக்க வேக வரம்பைக் கடைப்பிடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்!
Seekor harimau kumbang mati dirempuh kenderaan 4WD di LPT2 oleh pemandu berusia 19 tahun. Kejadian berlaku jam 1.15 pagi, tiada kecederaan pada pemandu. Bangkai diserahkan kepada Jabatan Perhilitan. Polis ingatkan pemandu lebih berhati-hati.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *