பாராங்கத்தியுடன் சுற்றிய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Apr, 2025
ஏப்ரல் 30,
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பாராங்கத்தியுடன் சுற்றிய ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக SANDAKAN மாவட்டக் காவல் ஆணையர் ASHMON BAJAH தெரிவித்தார். ஆடவர் ஒருவர் சாலையில் பாராங்த்தியன் சுற்றி திரிவதாகவும் வணிகக் கடைகளுக்குள் நுழைந்து மிரட்டுவதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ABX BANDAR INDAH பகுதிக்கு விரைந்து அச்சுறுத்திய ஆடவரைக் கைது செய்ததாக SANDAKAN மாவட்டக் காவல் ஆணையர் ASHMON BAJAH தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் 27 வயது இளைஞர் என்றும் வெளிநாட்டு நபர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிப்பதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக SANDAKAN மாவட்டக் காவல் ஆணையர் ASHMON BAJAH தெரிவித்தார். அவரிடமிருந்து 70 சென்டீ மீட்டர் நீளமுள்ள பாராங்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Seorang lelaki warga asing berusia 27 tahun ditahan polis di Sandakan selepas didapati mengugut orang awam sambil membawa parang. Suspek dipercayai mengalami masalah mental dan kini sedang menjalani pemeriksaan kesihatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *