10 கிலோ போதைப்பொருளைக் கடத்திய சிங்கப்பூர் ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 06 May, 2025
மே 6,
ஜொகூரில் 5 வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ போதைப்பொருள்களுடன் தொடர்புடைய 48 வயது சிங்கப்பூர் ஆடவரின் வழக்கு இன்று Sesyen நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவிருப்பதாக Sesyen நீதிமன்ற நீதிபதி Mohammad Khalid Ab Karim தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அந்த சிங்கப்பூர் ஆடவர் அரிய வகையான MDMA எனப்படும் Methylenedioxymethamphetamine போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதால் உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 29 இந்த வழக்கை விசாரிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜொகூரின் Batu Pahat, Kluang, Kota Tinggi ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் heroin, ketamine, MDMA எனப்படும் Methylenedioxymethamphetamine போதைப்பொருளுடன் 48 வயதான Tan Ban Choon எனும் சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்திருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 9 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
Seorang lelaki warga Singapura berusia 48 tahun ditahan bersama 10kg dadah bernilai RM9 juta dalam serbuan di lima lokasi di Johor. Kes melibatkan dadah jenis MDMA, heroin dan ketamin ini akan dipindahkan ke Mahkamah Tinggi pada 29 Julai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *