பேராக்கில் RM 4.6 மில்லியன் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

top-news

மே 8,

பேராக்கில் கடந்த 2 நாள்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 44 கிலோ எடையிலானப் போதைப்பொருள்களுடன் வியட்னாம் பெண் உட்பட மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். 4 வெவ்வேறு பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு RM 4.6 மில்லியன் ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை சித்தியாவானில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 29 வயது ஆடவர் 16,6 கிலோ கஞ்சா வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும் அதே நாளில் இரவு 7.30 மணிக்கு Simpang Tiga குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து 28 வயது உள்ளூர் இளைஞரும் வியட்னாம் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் 15,34 கிலோ எடையிலான MDMA வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும் நேற்று Lumut சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் 237 கிராம் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேராக் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.

Polis Perak menahan lima individu termasuk seorang wanita Vietnam dan merampas pelbagai jenis dadah seberat 44kg bernilai RM4.6 juta dalam beberapa serbuan di empat lokasi berasingan di negeri itu dalam tempoh dua hari lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *