அரசு நிலத்தை ஆக்கிரமித்த 4 வெளிநாட்டினர்கள் உட்பட ஐவர் கைது!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்ட 4 வெளிநாட்டினர்களையும் அவர்களைப் பாதுகாத்து வந்த ஓர் உள்ளூர் ஆடவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நேற்றிரவு BATU TALAM வனப்பகுதியில் சோதனையை மேற்கொண்டதில் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக ரவுப் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். சோதனையில் மோட்டார் சைக்கிளையும் HILUX வாகனத்தையும் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரும் காட்டுக்குள்ளேயே வீடுகளை அமைத்து வாழ்ந்து வருவதாகவும் வெளிநாட்டினர்களான நால்வரிடம் எந்தவோர் ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lima individu, termasuk empat warga asing dan seorang lelaki tempatan, ditahan kerana menceroboh hutan simpan di Batu Talam untuk aktiviti pertanian. Mereka membina rumah dalam kawasan hutan tanpa dokumen sah, dan beberapa kenderaan turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *