இரு லாரிகள் விபத்து! போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர் கைது!

- Sangeetha K Loganathan
- 04 May, 2025
மே 4,
நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்த TANKER லாரி மற்றொரு லாரியையும் வாகனத்தையும் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாக HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் லாரி ஓட்டுநர் மீது முன்னமே 4 போதைப்பொருள் வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த TANKER லாரி முன்னிருந்த TRELER லாரியையும் 31 வயது பெண் ஓட்டி சென்ற PROTON SAGA வாகனத்தையும் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் Mohd Asri Mohd Yunus உறுதிப்படுத்தினார். விபத்துக்குக் காரணமான 57 வயது TANKER லாரி ஓட்டுநர் மேலதிக விசாரணைக்காகவும் முந்தைய அவரின் குற்றவியல் வழக்குகளுக்காகவும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார்.
Sebuah lori tangki hilang kawalan dan melanggar sebuah treler serta kereta di Hulu Selangor. Pemandunya, yang positif dadah dan mempunyai 32 rekod jenayah, ditahan untuk siasatan lanjut. Tiada kematian dilaporkan dalam insiden itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *