லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! இளம்பெண் பலி! மாணவி படுகாயம்!

top-news

ஏப்ரல் 30,

எதிரே வந்த லாரியை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது இடைநிலைப்பள்ளி மாணவி பலியானதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு மாணவி படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு மலாக்காவில் உள்ள Jalan Pantai Belimbing சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் படுகாயம் அடைந்த 16 வயது இளம் பெண்கள் இருவரும் மலாக்கா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி Nur Alya Qaisara எனும் 16 வயது மாணவில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமிஞ்சை விளக்கை மீறி மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்கும் போது எதிரில் வந்த லாரியை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் சம்மந்தப்பட்ட 46 வயது லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இள்ம்பெண்ணும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Christopher Patit தெரிவித்தார்.

Seorang pelajar perempuan maut manakala rakannya cedera selepas motosikal mereka melanggar lampu isyarat sebelum merempuh lori di Melaka. Mangsa disahkan meninggal dunia lima jam selepas kejadian akibat kecederaan parah pada kepala dan organ dalaman

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *