நான் காலனித்துவவாதியா?அன்வாருக்கு அமெரிக்க அரசியல் விமர்சகர் கேள்வி!

- Muthu Kumar
- 25 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 25-
தம்மை காலனித்துவவாதி என்று முத்திரை குத்தியிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சாடியிருக்கிறார் அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் பில் ஒரெய்லி. மலேசியா உள்ளிட்ட மூன்று தென்கிழக்காசிய நாடுகளின் பணச் செலவிடும் ஆற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்த பில் ஓரெய்லியை காலனித்துவவாதி என்று அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவுக்கு அமெரிக்கா 145 விழுக்காடு இறக்குமதி வரி விதித்திருக்கும் நிலையில் அவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் மூண்டுள்ளது. இந்நிலையில், சீன அதிபர் சீ ஜின்பிங் மலேசியா, வியட்னாம், கம்போடியா மூன்று நாடுகளுக்கு அண்மையில் வருகை மேற்கொண்டிருந்தார்.
பொருளாதார சக்தியற்ற அந்த மூன்று நாடுகளுக்கும் ஜின்பிங் வருகை மேற்கொண்டதை கிண்டல் செய்திருந்த ஓரெய்லி, சீனப்பொருட்களை வாங்குவதற்கு அந்நாடுகளிடம் பணம் கிடையாது என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்திருந்த அன்வார், அந்த அரசியல் விமர்சகரின் கருத்து அவரின் காலனித்துவச் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
அன்வாரின் இக்கூற்றுக்கு காணொளி ஒன்றின்வழி நேற்று ஓரெய்லி பதில் கூறியிருந்தார். மலேசியாவின் வருடாந்திர குடும்ப வருமானம் 5,731 டாலராக இருக்கும் வேளையில், அமெரிக்கர்களின் குடும்ப வருமானம் 42,220 டாலராக உள்ளது. இது எட்டு மடங்கு அதிகமாகும் என்று அந்த அமெரிக்கர் சுட்டிக் காட்டினார்
ஐயாயிரம் டாலர் மட்டுமே வருமானம் ஈட்டும் மலேசியர்களான நீங்கள் ஒரு தொப்பியை கூட வாங்க விரும்ப மாட்டீர்கள். உங்களின் சம்பாத்தியம் சாப்பாட்டுக்கே சரியாக இருக்கும். ஆகவே,மலேசியாவிலும் வியட்னாம் மற்றும் கம்போடியாவிலும் சீனாவினால் பொருட்களை விற்க முடியாது. இது உங்களுக்குப் புரிகிறதா? என்று அன்வாரிடம் ஓரெய்லி வினவினார்.
நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், இந்த காலனித்துவவாதி ( ஓரெய்லி) உண்மையைத்தான் கூறியிருக்கிறார் என்றார்.
Pengulas politik Amerika, Bill O'Reilly mengkritik Perdana Menteri Anwar Ibrahim selepas dipanggil “kolonialis.” Anwar membalas kenyataan O'Reilly yang mempersoalkan kemampuan kewangan Malaysia, Vietnam dan Kemboja untuk membeli barangan China. O'Reilly mempertahankan dirinya dengan membandingkan pendapatan isi rumah Amerika dan Malaysia, menyatakan dirinya hanya berkata benar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *