மகாதீர் சர்ச்சை பேச்சு 3, சீனர்கள் இந்தியர்கள் மலாய்க்காரர்களைப் பொருளாதாரத்தில் புறக்கணிக்கிறார்கள்

- Sangeetha K Loganathan
- 03 May, 2025
மே 3,
மலேசிய பொருளாதாரத்தில் மலாய்க்காரர்கள் பின்தங்கியதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்கள் முக்கிய காரணம் என முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மலாய்க்காரர் அல்லாதவர்கள் என்பதை மகாதீர் சுட்டிக்காட்டினார். அவர்கள் பொருளாதாரத்தில் ஈடுபடுவதில் சிக்கலில்லை என்றும் ஆனால் மலாய்க்காரர்களுக்குப் போட்டியாகவும் மலாய்க்காரர்களுக்கு எதிராகவும் பொருளாதாரத்தில் ஈடுபடுவதாக மகாதீர் குற்றம்சாட்டினார்.
தற்போது அதிகமான மலாய்க்காரர் அல்லாதவர்கள் அரசாங்கத்தில் தகுதிகளைப் பெற்றும் மானியங்களைப் பெற்றும் மலாய்க்காரர்களுக்கு எதிராகவும் மலாய்க்காரர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத வகையிலான வணிகங்களை முன்னெடுப்பது பெருகி விட்டதாகவும் மகாதீர் தெரிவித்தார். இது மலாய்க்காரர்களின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு மட்டுமே இம்மாதிரியான முறையிலானப் பொருளாதாரம் பயனளிக்கும் என முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD குறிப்பிட்டுள்ளார்.
Sudah ternampak bibit-bibit sikap diskriminasi terhadap kita apabila mereka mendominasi ekonomi. Sudah tentu apabila mereka berkuasa penuh sebagai Kerajaan, dasar mereka ialah meritokrasi yang akan menguntungkan mereka. Dasar Ekonomi Baru yang mengandungi affirmative action akan digugur – TUN DR MAHATHIR BIN MOHAMAD
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *