மகாதீர் சர்ச்சை பேச்சு 1, இந்தியர்களும் சீனர்களும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை!

- Sangeetha K Loganathan
- 03 May, 2025
மே 3,
மலேசியாவில் வாழும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மலேசியாவிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தி விடவும் அவர்களின் தாய்நாட்டுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாக முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்கள் தங்கள் இன மொழி சமயம் கலாச்சாரம் பண்பாடு என எல்லாவற்றையும் மலேசியாவுடன் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் இன்னமும் அவர்களின் தாய்நாடாக எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD குறிப்பிட்டுள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதோரின் இன மொழி சமயம் கலாச்சாரம் பண்பாடு மட்டுமல்லாது அவர்களின் அரசியல் நிலைபாடும் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டுடன் ஒத்து வருவது போலவே கட்டமைத்து மலேசியாவில் வாழ்வதாகவும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். மலாய்க்காரர்கள் போல மலாய்க்காரர் அல்லாதவர்கள் நாட்டிற்கு உண்மையாக இல்லை எனும்படியானக் கருத்தை முன்னாள் பிரதமர் மகாதீர் முன்வைத்துள்ளார்.
Majoriti bukan Melayu ini tidak bersikap sepenuhnya sebagai rakyat negara ini seperti kita. Mereka terus mengenal diri mereka sebagai berasal dari negara asal mereka. Bahasa, budaya, persekolahan bahkan parti politik mereka juga dikaitkan dengan negara asal mereka. – TUN DR MAHATHIR BIN MOHAMAD
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *