செம்பனை தோட்டத்தில் மனித எலும்புகள்! – காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 08 May, 2025
மே 5,
தங்சோங் மாலிம் அருகே சிலிம் ரிவர் செல்லும் சாலையில் உள்ள செம்பனை தோட்டத்திலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக Muallim, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hasni Mohd Nasir தெரிவித்தார். செம்பனை தோட்டத் தொழிலாளர்கள் மனித எலும்புகளைக் கண்டதாக மாலை 5.13 மணிக்குப் புகார் அளித்த நிலையில் சம்ந்தப்பட்ட செம்பனை தோட்டத்திலிருந்து கை பகுதி மட்டும் இல்லாத நிலையில் மற்ற உடல் பகுதிகளுடன் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக Muallim, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hasni Mohd Nasir தெரிவித்தார்.
சேகரிக்கப்பட்ட மனித எலும்புகளுடன் மனித மண்டை ஓடும் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட எலும்புகளைப் பரிசோதனைக்காக ஈப்போவில் உள்ள Raja Permaisuri Bainun (HRPB) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் பரிசோதனைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாகவும் Muallim, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hasni Mohd Nasir தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆதாரமற்ற எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் பகிர வேண்டாம் என Muallim, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hasni Mohd Nasir கேட்டுக்கொண்டார்.
Manusia tidak dikenali ditemui dalam keadaan tinggal rangka di sebuah ladang kelapa sawit di Tanjung Malim, dengan beberapa bahagian seperti tangan hilang. Polis Muallim sedang menyiasat penemuan dan menghantar tulang ke HRPB untuk ujian forensik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *