பாரிசானிலிருந்து MCA விலகுமா? மக்களே முடிவெடுக்கட்டும்!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
பாரிசான் பக்காத்தான் கூட்டணியில் ம.சீ.சவுக்கு விருப்பமில்லை என்றும் அனால் பாரிசான் தலைமை எடுத்த முடிவுடன் ம.சீ.ச கட்டுப்பட்டு இது நாள் வரையில் சகித்துக் கொண்டிருப்பதாகவும் ம.சீ.ச பொதுச் செயலாளர் Datuk Chong Sin Woon தெரிவித்திருந்தாலும் அது பாரிசானின் முடிவல்ல அது ம.சீ.சவின் முடிவு என்றும் ம.சீ.ச யாருடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை ம.சீ.ச தான் முடிவு செய்ய வேண்டும் என Barisan Nasional உதவித் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Mohamed Khaled Nordin இன்று தெரிவித்தார்.
Barisan Nasional (BN) , Pakatan Harapan கூட்டணி என்பது தனிப்பட்ட கட்சிகளின் கூட்டணி அல்ல. அது இரு பெரும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு. தனி நபர் விருப்பு வெறுப்புகளையும் அரசியல் கருத்து முரண்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கான நல்லாட்சியை வழங்குவதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்படுகிறது. இந்த ஒற்றுமை கூட்டணியில் அங்கம் கொண்டிருக்கும் எந்தவொரு கட்சியும் இதே மனநிலையில் இருக்க வேண்டும் என்றும் வெளியேறினால் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் எதிர்காலம் குறித்து மக்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என Datuk Seri Mohamed Khaled Nordin வலியுறுத்தினார்.
MCA menyatakan ketidakpuasan terhadap kerjasama Barisan Nasional dengan Pakatan Harapan, namun Barisan Nasional menegaskan keputusan kekal dalam gabungan harus diputuskan oleh parti itu sendiri dan rakyat wajar menentukan masa depan politik MCA.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *