நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய இல்லத்தரசி கைது!

- Sangeetha K Loganathan
- 09 May, 2025
மே 9,
நிறுவனத்தில் புதிய குத்தகைகளைப் பெற்று தருவதாக நிறுவன உரிமையாளரை ஏமாற்றியதாக நம்பப்படும் 51 வயது உள்ளூர் பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக BUTTERWORTH MALISTRETகொண்டு வரப்பட்டார். 3 பிள்ளைகளுக்குத் தாயான அந்த இல்லத்தரசிக்கு நீதிமன்றம் RM28,000 நிபந்தனை ஜாமின் வழங்கியதுடன் எதிர்வரும் ஜூன் 6 விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
28 மோசடி வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் உள்ளூர் பெண் தன்மீதான அனைத்துக் குற்றங்களையும் மறுத்து மேல் விசாரணையைக் கோரினார். இந்த வழக்கில் சுமார் RM 172,985 ரிங்கிட் வரையில் மோசடி நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொள்ளும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita tempatan berusia 51 tahun ditahan kerana disyaki menipu pemilik syarikat berkaitan penyewaan premis. Dia berdepan 28 kes penipuan dengan jumlah kerugian mencecah RM172,985 dan telah dibawa ke Mahkamah Butterworth untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *