மசீசவுக்கான ஆதரவு சரிந்ததற்கு அம்னோவின் ஆணவமே' காரணம்!

- Muthu Kumar
- 04 May, 2025
கோலாலம்பூர், மே 4 -
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான அம்னோ வெளிப்படுத்திய "ஆணவப் போக்கினால்தான் மசீசவுக்குக் கிடைத்திருந்த ஆதரவு 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு சரிந்து போனதற்குக் காரணம் என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டில் நடந்த அம்னோ பொதுப் பேரவையின்போது, அப்போது அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த ஹிஷாமுடின் உசேன், கிரிஸ் கத்தியை உயர்த்திக் காட்டி அதை முத்தமிட்ட செயலைத் தொடர்ந்து தேசிய முன்னணிக்கான மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவு சரியத் தொடங்கியது. ஹிஷாமுடினின் அத்தகைய செயல் மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினரை வருத்தப்படச் செய்த ஒரு 'ஸ்டண்ட்' என்று, தி லியான் கெர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது அத்தகைய செயலுக்காக ஹிஷாமுடின் பின்னர் மன்னிப்புக் கோரிய போதிலும், 2008ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவு எதிர்க்கட்சி பக்கம் சென்றதற்கு வழிவகுத்த பல செயல்களில் ஹிஷாமுடினின் அத்தகைய நடவடிக்கையும் ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறியிருந்ததை லியான் கெர் சுட்டிக் காட்டினார்.
இது நடப்பதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர், ஒரு சீனக் குழுவான சுகியூவை “கடந்த கால கம்யூனிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தியதோடு, அல்முவானா சமயக் கும்பல் விவகாரத்தையும் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கையிலெடுத்திருந்ததாக லியான் கெர் குறிப்பிட்டார்.2006ஆம் ஆண்டில், மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு, அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஒரு புரிந்துணர்வு மகஜரை முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்நடவடிக்கை, சீன சமூகத்தினர் மத்தியில் கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி இருந்தது. எனினும், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணிக்கும் அம்னோவுக்கும் சீனர்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர். அத்தேர்தல்தான் அப்துல்லா தலைமையில் தேசிய முன்னணி சந்தித்த முதல் பொதுத் தேர்தலுமாகும்.
சீன சமூகத்தைக் காயப்படுத்திய மற்றொரு சம்பவமும் நடந்தது. தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஜசெகவின் முயற்சிக்கு நிதி உதவி செய்ததாக, வர்த்தகர் ரோபர்ட் குவோக்கிற்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும் என்று லியான் கெர் தெரிவித்தார்.இவற்றுடன் சேர்த்து, சீன சமூகத்திற்கு எதிரான மேலும் பல சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் சீன வாக்காளர்களின் ஆதரவு எதிர்க்கட்சிகளுக்குச் செல்ல அவை காரணங்களாக இருந்ததாகவும் லியான் கெர் தெரிவித்தார்.
Lian Ker, bekas timbalan ketua Amno, mengkritik tindakan Hishammuddin Hussein yang mengangkat keris pada 2005, yang menyebabkan kehilangan sokongan daripada komuniti bukan Melayu. Ini menyumbang kepada penurunan sokongan dalam pilihan raya umum 2008.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *