கடலில் தவறி விழுந்த இருவர்! ஒருவர் பலி! மற்றொருவர் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 06 May, 2025
மே 6,
கிள்ளான் துறைமுகத்தில் உள்ள JETI – இல் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த ஆடவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று இரவு 9.20 மணியளவில் PORT கிள்ளானில் உள்ள MATRAIN துறைமுகத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருவர் கடலில் விழும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது,
மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரில் 30 வயது இளைஞர் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் உடன் இருந்த 30 வயது நபர் இன்று காலை 8.17 மணிக்குத் துறைமுக மீட்பு ஆணைய அதிகாரிகள் சடலமாக மீட்டதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்ததாகக் காணொலியின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Dua lelaki terjatuh ke laut bersama motosikal di jeti Pelabuhan Klang. Seorang mangsa berusia 30 tahun diselamatkan oleh orang awam manakala rakannya ditemui maut pada keesokan pagi oleh pasukan penyelamat selepas motosikal terbabas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *