நஜீப்பிற்கு எதிராகப் புதிய வழக்குகள்! வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak மீதான வழக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைகள் முடிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் புதிதாக வழக்குகளையும் சாட்சியங்களையும் அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்வதாக நஜீப்பின் வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah தெரிவித்தார். நஜீப்பின் மீதான வழக்குகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட பின்னரே வழக்கு தொடர்பான ஆவணங்கள் தங்களுக்குக் கிடைப்பதாகவும் அதுவும் தாமதமாகக் கிடைப்பதால் ஒவ்வொன்றுக்கும் சாட்சிகளையும் ஆதாரங்களையும் திரட்டி வழக்கிலிருந்து நஜீப்பை மீட்பதற்குள் புதிதாக மற்றொரு வழக்கைத் தொடுப்பதாக Tan Sri Muhammad Shafee Abdullah குற்றம் சாட்டினார்.
நஜீப் மீது அரசு தரப்பினர் முன்வைக்கும் வழக்குகளி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்குப் பின்னரே நஜீப்பின் வீட்டுக் காவல் பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வரும் என்பதால் தொடர்ந்து புதிது புதிதாக வழக்குகளைத் தொடுப்பதாகவும் விசாரணைக்கானக் கால அவகாசமும் முழுமையாக இல்லாமல் சில மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் இதனால் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தொடர்ந்து இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப்படுவதாகவும் நஜீப்பின் வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah தெரிவித்தார்.
Peguam Datuk Seri Najib Tun Razak mendakwa kerajaan terus mengemukakan kes baharu terhadap bekas Perdana Menteri tanpa memberi masa mencukupi untuk menyediakan pembelaan, serta menuduh dokumen penting hanya diterima selepas mahkamah menerima kes.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *