நஜீப்பின் மீது மேலும் 3 புதிய வழக்குகள்!

- Sangeetha K Loganathan
- 06 May, 2025
மே 6,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தற்போது எதிர்நோக்கியிருக்கும் ஊழல் பணமோசடி வழக்குகளுடன் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் விசாரிக்குமா இல்லையா என்பது குறித்து 1 மாதக் காலம் ஆலோசனை நடத்தப்படும் என அட்டர்னி ஜெனரல் அலுவகம் (AGC) தெரிவித்துள்ளது, SRC International Sdn Bhd நிறுவனத்துடன் தொடர்புடைய RM 27மில்லியன் தொடர்புடைய வழக்கில் அட்டர்னி ஜெனரல் அலுவகம் (AGC) விரைந்து தீர்வைக் காண வேண்டும் என முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakகின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah வலியுறுத்தினார்.
இந்த புதிய 3 வழக்குகள் தொடர்பாகக் கடந்த ஜூலை 2023 லேயே விளக்க மனு அளிக்கப்பட்டதாகவும் அட்டர்னி ஜெனரல் அலுவகம் (AGC) சம்மந்தப்பட்ட மனுவை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் அலுவகம் (AGC) மீளாய்வு செய்யும் வரையில் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்தும்படியும் Tan Sri Muhammad Shafee Abdullah வலியுறுத்தினார். இந்த விவகாரம் 2 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய Tan Sri Muhammad Shafee Abdullah விரைந்து அலோசனையை நடத்தி முடிவெடுக்கும்படி வலியுறுத்தினார்.
Bekas Perdana Menteri Najib Razak mungkin berdepan tiga lagi pertuduhan baharu berkaitan SRC International melibatkan RM27 juta. Peguam beliau mendesak Jabatan Peguam Negara mempercepat keputusan, selepas dua tahun permohonan ulasan semula tertangguh sejak Julai 2023.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *