இந்தியாவும்,பிரான்சும் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்து!

- Muthu Kumar
- 21 Apr, 2025
2016ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள், ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் வாங்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வின்போது இரு தரப்பில் இருந்தும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக பிரெஞ்சு அமைச்சர் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தெற்கு பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்திற்கு வெளியே இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *