பாகிஸ்தானின் முதுகெலும்பான ராணுவ அமைப்புகளை தகர்த்த இந்தியா!

- Muthu Kumar
- 10 May, 2025
3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,
1.. நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
2. PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
3. PAF முரிட் விமான தளம், சக்வால்
இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் அடிமடியில் இந்தியா கைவைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த தளங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் முதுகெலும்பாக கருதப்படும் ராணுவ அமைப்புகள் ஆகும்.
1. நூர் கான் விமானப்படை தளம், ராவல்பிண்டி
VIP & ஸ்ட்ராட்டஜிக் போக்குவரத்து மையம் - உயர் மட்ட இராணுவ மற்றும் அரசாங்க போக்குவரத்தை கையாளும் மையம். அவசர காலத்தில் பிரதமரே இங்கிருந்துதான் தப்பிக்க வேண்டும். இது தாக்கப்பட்டு உள்ளது.தலைநகருக்கு அருகாமையில் உள்ளது - பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராணுவ நரம்பு மையமான இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பிற்கு அருகில் உள்ளது.
ஏர் மொபிலிட்டி கமாண்ட் - பாகிஸ்தான் முழுவதும் விமான தளவாடங்கள் மற்றும் துருப்புக்களின் இயக்க நடவடிக்கைகளை கண்காணிக்கும், கட்டளைகளை இடும் ஏர் மொபிலிட்டி கமாண்ட் இங்கே உள்ளது. இராணுவ-சிவில் ஒருங்கிணைப்பு - பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துடன் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இராணுவ மற்றும் சிவில் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது.
விரைவான செயல்பாடு - தேசியத் தலைமை அல்லது எல்லைகளுக்கு அருகில் நெருக்கடி ஏற்பட்டால் விரைவாகப் படைகளை நிலைநிறுத்த முடியும். இதை இந்தியா தாக்கி உள்ளது.
2. PAF ரஃபிகி விமானப்படை தளம், ஷோர்கோட்:
முன்னணி போர் விமானப்படை தளம் - JF-17 தண்டர் மற்றும் F-7PGகள் உள்ளிட்ட போர் விமானப்படைப் பிரிவுகள் இங்கேதான் உள்ளன.விமானப்படை மையமாக அமைந்துள்ளது - கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை விரைவாக அணுகுவதற்கான விமானப்படை மையமாக அமைந்துள்ளது.
பயிற்சி மற்றும் செயல்பாடுகள் - போர் பயிற்சிகள் மற்றும் நேரடி தாக்குதல் பயிற்சிகள் இங்கேதான் நடக்கும்.பங்கர் - இங்கே பங்கர்கள் உள்ளதாக நம்பபப்டுகிறது.
முக்கிய விமானப்படை தளம் - பாகிஸ்தானின் இரண்டாம் நிலை தளமாக செயல்பட முடியும். இதை இந்தியா தாக்கி உள்ளது.
3. PAF முரிட் விமானப்படை தளம், சக்வால்
ஏவுகணை பயன்பாடு - ஏவுகணையை பயன்படுத்தும் விமானப்படை தளம் ஆகும்.
பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு இடம் -எல்லையில் நடக்கும் அச்சுறுத்தலில் இருந்து விலகி, உள்நாட்டில் ஆழமாக அமைந்துள்ளது.ஆனால் இதையும் இந்தியா தாக்கி உள்ளது.
மின்னணு போர் - ரேடார், கண்காணிப்பு மற்றும் ஆதரவு விமான நடவடிக்கைகளை நடத்தக்கூடும்.மத்திய கட்டளை - பஞ்சாப் பகுதியில் வான் பாதுகாப்பை வழங்குகிறது. இரண்டாம் கட்ட விமானப்படை மத்திய கட்டளை அமைப்பாக செயல்படுகிறது. இதையும் இந்தியா தாக்கி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *