கடல் சீற்றத்தில் சிக்கிய 8 மீனவர்கள்! ஒருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 05 May, 2025
மே 5,
இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக BATU PAHAT-ஐ சேர்ந்த 8 மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கியதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும் மேலும் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் Batu Pahat, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். பத்து பஹாட்டில் 0.8 கடல் மைல் தொலைவில் எதிர்பாராத கடல் சீற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகாலை 5 மணியளவில் கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட 3 மலேசிய மீனவர்களும் 4 இந்தோனேசிய மீனவர்களும் மீட்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு 45 வயதான Mohd Faizal Mohd Nor எனும் மலேசியரின் உடலைச் சடலமாக மீட்டதாகவும் Batu Pahat, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lapan nelayan dari Batu Pahat dilaporkan terperangkap dalam laut bergelora awal pagi ini. Seorang daripada mereka maut akibat lemas manakala tujuh lagi berjaya diselamatkan oleh pihak berkuasa maritim, menurut polis daerah Batu Pahat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *