பள்ளி மாணவர்கள் & ஊழியர்களுக்கு அடையாளம் காணப்படாத தொற்று நோய்! 39 பேர் பாதிப்பு

- Shan Siva
- 27 Apr, 2025
கோலலம்பூர், ஏப்ரல் 27: கெடாவின் யான் நகரில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 39 பேர், இன்னும் அடையாளம் காணப்படாத "தொற்று நோய்" காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பிறகு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காய்ச்சல், இருமல் மற்றும் அறிப்புக்கான அறிகுறிகள் இருந்ததாக மாநில வீட்டுவசதி, உள்ளூராட்சி மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் மன்சோர் ஜகாரியா தெரிவித்தார்.
மாணவர்கள் சுங்கை பட்டானியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்!
Di Yan, Kedah, seramai 39 pelajar dan kakitangan sekolah dimasukkan ke hospital akibat penyakit berjangkit yang tidak dikenalpasti selepas menyertai kem latihan. Mereka mengalami demam, batuk dan sakit tekak, namun keadaan mereka stabil. Siasatan sedang dijalankan oleh pihak kesihatan negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *