ஆன் லைன் மோசடி! RM 30 லட்சம் இழந்த சிரம்பான் நபர்

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஏப்ரல் 30: அதிக வருமானம் தரும் ஒரு ஆன்லைன் முதலீட்டுத் திட்டம் என விளம்பரப்படுத்தப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்த 51 வயது நபர் ஒருவர், சுமார் RM30 லட்சம் வரைக்கும் மோசடி செய்யப்பட்டுள்ளார்.

தனியார் துறை ஊழியரான பாதிக்கப்பட்டவர், சீனாவில் செயல்படும் நிறுவனங்களின் தகவல் தொடர்பு, தொழில்துறை மற்றும் பெட்ரோலியம் தொடர்பான பங்குகளில் முதலீடு செய்வதாக ஏமாற்றப்பட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர்,உதவி ஆணையர் முகமட் ஹட்டா சே டின் தெரிவித்தார்.

முதலீடுகள் தனக்கு அதிக வருமானத்தைத் தரும் அவர் நம்ப வைக்கப்பட்டதால், கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி முதலீடு செய்யத் தொடங்கியிருப்ப்தாக முகமட் ஹட்டா கூறினார்.

அவர் 34 பரிவர்த்தனைகள் மூலம் நிறுவனங்கள் நான்கு கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளார்.

ஆரம்ப முதலீடுகளைச் செய்த பிறகு, அவரது லாபம் உயர்ந்ததைக் கண்டதை அடுத்து அடுத்தடுத்து பரிவர்த்தனைகள் செய்து பலியாகிவிட்டார்.

இறுதியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஏப்ரல் 17 அன்று பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததாக ஏசிபி முகமது ஹட்டா கூறினார்.

இதனை அடுத்து, ஆன்லைன் முதலீடுகளைச் செய்யத் திட்டமிடுபவர்கள், குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானத்தை வழங்கும் திட்டங்கள், முதலீடு செய்வதற்கு முன் பேங்க் நெகாரா அல்லது செக்யூரிட்டீஸ் கமிஷன் போன்ற அதிகாரிகளிடம் சரிபார்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்!

Seorang lelaki berumur 51 tahun ditipu RM3 juta dalam skim pelaburan dalam talian palsu berkaitan syarikat China. Mangsa membuat 34 transaksi sebelum menyedari penipuan. Polis menasihatkan semakan dibuat dengan pihak berkuasa sebelum melabur.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *