P.K.R துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி! நல்ல செய்தி சொல்கிறேன்! - Nurul Izzah Anwar

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
P.K.R கட்சியில் நடப்பு உதவித் தலைவரும் அன்வாரின் மகளுமான Nurul Izzah Anwar பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென கட்சியின் தொகுதித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அதுகுறித்து விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என Nurul Izzah Anwar இன்று தெரிவித்தார். கட்சியின் தொகுதித் தலைவர்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும் தாம் கடமைப்பட்டிருப்பதாகவும் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது ஆலோசிப்பதாகவும் Nurul Izzah Anwar தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவது முக்கியமல்ல என்றாலும் கட்சியின் ஒருங்கிணைப்பில் எந்தவொரு பிளவும் ஏற்படாமல் முடிவுகளைத் தாம் எடுக்கவிருப்பதாகவும் Nurul Izzah Anwar தெரிவித்தார். நாளை தொடங்கி வெள்ளிக் கிழமை வரையில் பி.கே.ஆர் கட்சியின் மேலவை பொறுப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் நிலையில் Nurul Izzah Anwar துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.கே.ஆர் கட்சியின் நடப்புத் துணைத் தலைவரான Datuk Seri Rafizi Ramli தனது பதவியைத் தற்காத்துக் கொள்வாரா பி.கே.ஆரின் முன்னாள் பொதுச் செயலாளர் Datuk Seri Saifuddin Nasution Ismail துணைத் தலைவருக்குப் போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபராக Nurul Izzah அன்வாரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியில் இணைவார் என அரசியல் வட்டாரங்கள் கணித்து வருகின்றன.
Nurul Izzah Anwar dijangka bertanding jawatan Timbalan Presiden PKR setelah menerima desakan daripada ketua-ketua cabang parti. Beliau menyatakan akan membuat pengumuman rasmi tidak lama lagi dan menegaskan pentingnya menjaga perpaduan dalam parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *