கொத்தோங் ரோயோங் பெர்டானா திட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மை கண்காணிக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், மே 8-

கொத்தோங் ரோயோங் பெர்டானா கூட்டுப் பணித் திட்டத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள தூய்மை அதன் தரம் உயர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் என்று கோலலங்காட் மாவட்ட சுகாதார இலாகா உயர் நிலை அதிகாரி டாக்டர் நோர்ஹயாத்தி மொக்தார் தெரிவித்தார்.

சுற்றுப் புறங்களின் தூய்மைக்கான பணிகளும் அதற்கான செலவினங்களும் அதிகரித்து வரும் நிலையில் அதன் தரம் உயர்த்தப்பட்டு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேற்றைய வாராந்திரக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு சுகாதார அதிகாரிகள் மருத்துவர்கள் ஒப்புதலுடன் கொத்தோங் ரோயோங் பெர்டானா திட்டம் படிப்படியாக செயல்படுத்தப் பட விருப்பதாக அவர் கூறினார்.

மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எழுந்துள்ள ஏடிஸ் கொசுக்களின் ஆதிக்கமும் அதன் காரணமாக கொசுக்கடியால் டெங்கிக் காய்ச்சல் கண்டு பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைக் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு சுற்றுப் புறத் தூய்மையும் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் நாளை 9.5.2025 (வெள்ளிக்கிழமை) காலை முதல் கட்ட நடவடிக்கையாக சுகாதார அதிகாரிகள் ரெட் ஷோன் எனப்படும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் பயணித்து தகவல்களைச் சேகரித்து வருவார்கள் என்று டாக்டர் நோர்ஹயாத்தி தெரிவித்தார்.

Kebersihan kawasan perumahan di Kothong Royong Perdana dipertingkatkan demi mengekang peningkatan kes denggi. Pihak kesihatan akan mula tinjauan di zon merah pada 9 Mei 2025 bagi memantau dan mengawal penularan wabak tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *