புதிய போப் லியோவுக்கு அன்வார் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 9:  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளா போப் லியோவுக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும், குறிப்பாக மலேசியாவில் உள்ள கத்தோலிக்க விசுவாசிகளுக்கு தனது அன்பான வாழ்த்துக்களை அவர் கூறினார். 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று அன்வார் கூறினார்

மலேசியா புனித போப் உடனான தனது உறவுகளை மதிக்கிறது, மேலும் பரஸ்பர மரியாதை, உரையாடல் மற்றும் அமைதி மற்றும் மனித கண்ணியத்திற்கான  பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றிய தொடர்ச்சியான ஈடுபாட்டை எதிர்நோக்குகிறோம்," என்று அன்வர் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் வியாழக்கிழமை புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார் - போப் பதவியில் அமர்ந்துள்ளா முதல் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது!
Perdana Menteri Anwar Ibrahim mengucapkan tahniah kepada Pope Leo yang baharu, menyatakan harapan agar hubungan Malaysia dan Vatican terus kukuh berdasarkan saling menghormati, dialog dan komitmen terhadap keamanan serta maruah insan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *