உதவுபவர்களிடமும், நல்மனம் உள்ளவரிடமும் கடவுள் இருப்பார்-ஓம்ஸ் பா.தியாகராஜன்!

top-news
FREE WEBSITE AD

(எம் முருகன்)

கோலாலம்பூர் ஏப்.28-

சீர்டி சாய்பாபாவின் 9 படிப்பினைகள் நூல் வெளியீடு கண்டது.இந்நூலின் அறிமுகவிழா தோட்ட மாளிகையில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஏற்று விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து நூலை வெளியீடு செய்தார் ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன்.

அன்பு செய்பவர்களிடமும் உதவி செய்பவர்களிடமும் நல்ல மனம் படைத்தவர்களிடமும் கடவுள் இருப்பார். மேலும் சீர்டி பாபாவின் சீடர் கண்ணன் எனக்கு அறிமுகமானவர். அவர் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். அவரை பாராட்டுகிறேன். அவருக்கு பாபா என்றும் துணையாக இருக்கிறார்.




அதுபோல இந்த நூல் வெளியீட்டு விழா எனக்கு ஒரு மாறுபட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த நூலை எழுதுவதற்கு டத்தோ முருகேசனுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்கு பாபாவின் ஆசியும் உள்ளது. ஆசி இருந்தால்தான்
இந்த நூலை எழுத முடியும். கொடுப்பினையும் வேண்டும். இது அவருக்கு அமைந்துள்ளது. அவரை பாராட்டுகிறேன். மேலும் நான் வள்ளலார் பக்தர் என்பதை சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

பாபா ஒரு மாமனிதர் அவருக்கு இந்த புத்தகம் அழகாக அமைந்துள்ளது. அதை எழுதிய முருகேசனை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.சமுதாயத்திற்கு நல்லது செய்பவர்கள் அனைவரும் கடவுள்தான். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கண்ணன் பாபா சென்டருக்கு அழைத்திருந்தார். அங்கு சென்று பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு வள்ளலார் படமும் இருந்தது.

பாபாவிற்கு நாடு முழுவதிலும் சென்டர்கள் உள்ளன.அனைவரும் வழிபட்டு வருகின்றனர்.
அவருக்கு இந்த புத்தகம் எழுதும் பாக்கியத்தை முருகேசன் பெற்றுள்ளார். அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கி ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதல் நூலை டத்தோ சகாதேவன் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் டத்தோ சோதிநாதன். தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் முருகன், பாபா சென்டரின் ஆலோசகர் கண்ணன், மனோகரன் மலையாளம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார்கள்.

Buku "9 Pengajaran Shirdi Sai Baba" dilancarkan di Dewan Maliga, diketuai oleh Pengerusi OMS, P. Thiagarajan. Buku ini ditulis oleh Dato' Murugesan dengan restu Baba. Pelbagai tokoh termasuk Kannan dan Dato' Sokathiven hadir menyokong acara ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *