குனோங் லெடாங் நீர்வீழ்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜொகூர் மந்திரி பெசார்!

top-news
FREE WEBSITE AD

தங்கா, ஏப்.27-

(கோகி கருணாநிதி)

ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, தங்காக்கில் நடைபெற்று வரும் குனோங் லெடாங் நீர்வீழ்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது இந்தத் திட்டம் 90 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையை எட்டியுள்ளது என்பதை குறிப்பிட்டார்.

இந்த திட்டம், மாநில அரசின் முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும். மாநிலத்தின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதோடு,
உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இது முன்னெடுக்கப்படுகிறது. தனித்துவமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள குனூங் லெடாங், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கியமான சுற்றுலாத் தளமாக உருவெடுக்கும் திறன் கொண்டது என டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

இந்த மேம்பாட்டு வேலைகள் நிறைவடைந்தவுடன், சுற்றுலா அம்சங்கள் சிறப்பாகவும் வசதிகரமாகவும், பயணிக்கவரும் முறையில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

இந்த இடத்துக்கு அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், அனைத்து மேம்பாட்டு திட்டங்களும் திட்டமிட்டபடி மற்றும் திறம்பட நடைபெறுவதை உறுதி செய்யும் மாநில அரசின் உறுதியான நோக்கத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பாக,வரும் ஜொகூர் சுற்றுலா ஆண்டு 2026ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்பதிவு பணிகளின் ஒரு கட்டமாக இது அமைகின்றது. செலவிடப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும் மக்கள் நலனுக்காகவே பயனளிக்க வேண்டும் என்பதையே அரசு முன்னிட்டு செயல்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனைத்து முயற்சிகளும், ஜொகூர் மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் நீண்டகால நலனையும், திடமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Menteri Besar Johor, Datuk Onn Hafiz Ghazi, melawat dan memeriksa Projek Pembangunan Air Terjun Gunung Ledang Fasa Kedua di Tangkak, yang kini 90% siap. Projek ini bertujuan mengukuhkan sektor pelancongan negeri dan merangsang ekonomi setempat, menjelang Tahun Melawat Johor 2026, serta memberi peluang pekerjaan kepada penduduk tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *