பாய்லர் வெடித்து தீ விபத்து! நால்வர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 3: சிலாங்கூர், தஞ்சோங் காராங்கில் உள்ள ஒரு செம்பணை எண்ணெய் ஆலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் நான்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.

பெஸ்தாரி ஜெயா நிலையத்திற்கு காலை 8.55 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு பணியாளர்களை அனுப்பியதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் மொக்தார் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் நீராவி பாய்லரில் தண்ணீரை சூடாக்கும் போது ஏற்பட்ட வெடிப்பின் விளைவாக ஏற்பட்ட தீ, குழு வந்த நேரத்தில் ஏற்கனவே அணைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நால்வரில் ஒரு இந்தியர், இரண்டு நேபாளியர்  மற்றும் ஒரு வங்கதேசத்தைச் சேர்ந்தவர் அடங்குவார்கள் என்றும், அனைவரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரின் கால்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன, தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் அவர்களை தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்று முக்லிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்!

Di Tanjong Karang Selangor, empat pekerja asing cedera akibat letupan boiler di kilang minyak sawit. Letupan berlaku ketika memanaskan air, menyebabkan kebakaran kecil. Mangsa berusia 20–30 tahun dihantar ke hospital sebelum pasukan bomba tiba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *