வர்த்தகப் போர் காலகட்டத்தில் விடுமுறையில் செல்வதா? ரஃபிஸியை சாடியது எதிர்க்கட்சி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6 -

உலக வர்த்தகப் போர் நடந்து வருவதற்கு மத்தியில், விடுமுறையில் சென்றிருப்பதற்காக பொருளாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ராம்லியை பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியிருக்கின்றார்.“இது வழக்கத்திற்கு மாறான ஒன்று” என்று பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி கூறியிருக்கின்றார்.

“சாத்தியமானால், (அமெரிக்காவின் வரி விதிப்பு) பேச்சுவார்த்தைக்கு ஒரு மூத்த அமைச்சர் அனுப்பப்பட வேண்டும். பணிக்குத் திரும்புமாறு பொருளாதாரத்துறை அமைச்சரை (ரஃபிஸி) நாம் அழைக்க வேண்டும்” என்று, மக்களவையில் நேற்று திங்கள்கிழமை அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்கும்போது ஃபட்லி தெரிவித்தார்.

“விடுமுறையை அங்கீகரித்திருப்பது நியாயமானதல்ல. நாம் இப்போது (வர்த்தக) போரின் விளிம்பில் இருக்கின்றோம். அது ஒரு வர்த்தகப் போராகக் கூடும். அப்படி இருக்க, பொருளாதாரத்துறை அமைச்சருக்கு ஒரு மாதகால விடுமுறையை நாம் வழங்கி இருக்கின்றோம். அவர் மிக முக்கியமான பொறுப்பை வகிக்கின்றார்” என்று அவர் கூறினார்.இதன் காரணத்தினால் மலேசியா ஒரு கேலிப் பொருளாக மாறக் கூடும் என்றும் ஃபட்லி தெரிவித்தார்.

தாம் சார்ந்திருக்கும் பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல்களில் தமது ஆதரவாளர்களில் பலர் தோல்வி அடைந்த சமயத்தில், ரஃபிஸி விடுமுறையில் சென்றிருக்கின்றார்.ஓர் ஊழியர் விடுமுறை கோருவது வழக்கமான ஒன்று என்று, இம்மாதம் 2ஆம் தேதி கூறியிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுவதையும் நிராகரித்திருந்தார்.

“சில நாட்களுக்கு மட்டுமே விடுமுறையில் செல்வது விவகாரமே அல்ல. நானும் சில நாட்களுக்கு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன்” என்று அன்வார் தெரிவித்திருந்தார்.

கட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் அதிருப்தி அடைந்த காரணத்தினால் தான், பிகேஆர் துணைத் தலைவருமான ரஃபிஸி, இம்மாதம் 31ஆம் தேதி வரையில் விடுமுறையில் சென்றிருப்பதாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டிருந்தபோது அன்வார் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

Ahli Parlimen Pasir Mas mengkritik Menteri Ekonomi Rafizi Ramli kerana bercuti ketika isu perang perdagangan global memuncak. Beliau menegaskan menteri penting seperti Rafizi seharusnya terlibat dalam perbincangan ekonomi, bukan mengambil cuti panjang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *