ஓடும் வாகனத்திலிருந்து குதித்து இறந்த பெண்! - கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நிகழ்ந்தாக போலிஸ் உறுதி

- Shan Siva
- 08 May, 2025
கோலாலம்பூர், மே 8: கெசாஸ் நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த பெண், தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப்
பிறகு ஓடும் வாகனத்திலிருந்து குதித்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி
இசா இன்று தெரிவித்தார்.
திருமணமாகி
சுமார் 20 ஆண்டுகள் ஆன இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், வேனை ஓட்ட மனைவி விரும்பினாலும், உரிமம் இல்லாததால் கணவர் மறுத்ததால் மனைவி சண்டையில்
ஈடுபட்டதாக ருஸ்டி கூறினார்.
இந்த வழக்கை
இருவருக்கும் இடையிலான வழக்கமான குடும்ப சண்டை என்று அவர் விவரித்தார். நேற்று
பூச்சோங்கின் தாமான் கின்ராராவில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்ட 50 வயது
கணவர் மே 10 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு போதைப்பொருள்
பயன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனது மனைவி மெத்தாம்பெத்தமைன்
பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304A இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, இது 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்கிறது!
Seorang wanita maut selepas terjun dari van ketika bertengkar dengan suaminya di Kesas. Polis sahkan suami ditahan, disyaki terlibat dadah. Kes disiasat bawah Seksyen 304A kerana menyebabkan kematian akibat kecuaian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *