மக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து மடானி அரசாங்கத்தைத் தடுக்காதீர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 30-

நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்திருத்த மசோதாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதற்கான சிறப்பு ஆய்வுப் பயணத்தில் கலந்து கொள்ளாத எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கை, வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்றத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கடுமையாகச் சாடியுள்ளார்.

கோலாலம்பூர் சுற்றுப் பகுதியில் உள்ள நான்கு இடங்களுக்கான வருகை நிறைவடைந்த பின்னர், அந்த வருகைகளில் ஒன்றில்கூட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட கலந்து கொள்ளாதது குறித்து தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சட்டத்திருத்த மசோதா விவகாரத்தை எதிர்க்கட்சியினர். குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனல் எம்பிக்களில் பலர் அரசியலாக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.
“பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு அழைப்புகளை நான் விடுத்திருந்தேன். வருவதாக அவர்கள் வாக்குறுதியும் அளித்திருந்தனர்.

“ஆனால், எங்களின் பயணத்தை தொடங்கிய பொழுது இந்த முக்கியமான பயணத்தில் கலந்து கொள்ள அவர்கள் தவறிவிட்டனர்" என்று, கோலாலம்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது ஙா தெரிவித்தார்.நேற்றைய இந்த பயணத்தில் எட்டு நாடாளுமன்ற உறுபினர்களும் ஒன்பது மேலவை உறுப்பினர்களும் (செனட்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

இப்பயணத்தின்போது, கோலாலம்பூரில் மிக மோசமான நிலையிலுள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்குள்ள மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சேதமடைந்துள்ள அடுக்குமாடி வீடுகளை சீரமைப்பு செய்வது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.இந்த சட்டதிருத்த மசோதாவை அமல்படுத்த, இதற்கு முன்பிருந்த வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்றத்துறை அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்ததாக ஙா கூறினார்.

“ஆனால், இப்போது அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். முன்பு ஒப்புக் கொண்டனர், இப்போது எதிர்க்கின்றனர். இந்த மசோதா அவர்கள் கொண்டு வந்த அதே மசோதாதான். அது கடந்த 2013ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது.'மக்களுக்கு உதவுவதிலிருந்து மடானி அரசாங்கத்தைத் தடுக்காதீர்கள் என்று. எதிர்க்கட்சியினரை ஙா கடுமையாகவே சாடினார்.

இதனிடையே, தீபகற்ப மலேசியா முமுமையிலும் நகர்ப்புற புதுப்பித்தல் மேம்பாட்டுக்காக தமது அமைச்சு மொத்தம் 534 பகுதிகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவற்றில் 139 பகுதிகள் கோலாலம்பூரில் உள்ளதோடு, அவற்றின் நிலப்பரப்பு 1,297 ஹெக்டர் என்றும் ஙா தெரிவித்தார்.

“ஹாங்காங், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியா 35 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது. அம்மூன்று நாடுகளும் கடந்த 1991ஆம் ஆண்டு முதலே இத்தகைய மசோதாவை அறிமுகப்படுத்தத் தொடங்கி விட்டன என்று ஙா கூறினார்.

Menteri Perumahan dan Kerajaan Tempatan, Nga Kor Ming, mengkritik ahli Parlimen pembangkang yang tidak hadir dalam lawatan khas mengenai pindaan rang undang-undang pembaharuan bandar. Beliau menegur pembangkang yang kini menentang rang undang-undang yang mereka sokong sebelum ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *