எந்திரத்தில் சிக்கி வெளிநாட்டுத் தொழிலாளி பலி! - கிள்ளானில் பரிதாபம்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஏப்ரல் 30: போர்ட் கிள்ளானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று துப்புரவுப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, ​​ஒரு வெளிநாட்டு தொழிலாளி blow moulding  இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

காலை 7.35 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகவும், அதன் விசாரணை அதிகாரி உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் தொழிற்சாலையின் உற்பத்திப் பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட புதிதாகப் பணியமர்த்தப்பட்ட தொழிலாளி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 சம்பவத்தின் போது, ​​தொழிலாளி இயந்திரத்திற்குள் சிக்கியிருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை அகற்ற முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இதனை அடுத்து, இயந்திரம் சம்பந்தப்பட்ட சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு முறையான பணி நடைமுறைகளை வழங்கத் தவறியதற்காக முதலாளிக்கு இரண்டு தடை அறிவிப்புகளும் வழங்கப்பட்டன.

சம்பவத்தில் தொடர்புடைய மூல காரணங்களையும் பொறுப்பான தரப்பினரையும் அடையாளம் காண முழுமையான விசாரணை நடந்து வருகிறது.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 இன் பிரிவு 15(1) இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!

Seorang pekerja asing maut selepas tersepit dalam mesin blow moulding ketika membersih di sebuah kilang di Port Klang. Mangsa merupakan pekerja baru, cuba mengeluarkan botol plastik tersekat. Siasatan sedang dijalankan di bawah Akta Keselamatan dan Kesihatan Pekerjaan 1994.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *