தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 1: உழைக்கும் மக்களின் நல் வாழ்வுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக அமைந்துள்ள இந்த நன்னாளில், அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக தமது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு தேசமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி தொழிலாளர்களே முதுகெலும்பாக தாங்கி நிற்கிறார்கள். நம் ஒவ்வொருவரின் நலனுக்கும் பின்னாலும் எண்ணற்ற முகம் தெரியா உழைப்பாளிகளின் உழைப்பு இருக்கிறது. எனவே அந்த உழைப்புக்கு மரியாதை கொடுத்து அவர்களின் உரிமைகளை மதித்து மென்மேலும் சிறக்க இந்த நல்ல நாளில் வாழ்த்துவோம் என அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், நம் மலேசியாவில் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 1700 வெள்ளியாக அரசு உயர்த்தியிருக்கும் செயலுக்கும் இந்த நேரத்தில் தாம் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்!

OMS P. Thiagarajan menghargai peranan pekerja sebagai tulang belakang negara dan menyeru agar hak mereka dihormati. Beliau juga berterima kasih kepada kerajaan kerana menaikkan gaji minimum kepada RM1700 demi kesejahteraan pekerja di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *