கொசோவோ அதிபர் மலேசியாவுக்கு வருகை!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், மே 2-

கொசோவோ அதிபர் டாக்டர் வோசா ஒஸ்மானி சாட்ரியூ நான்கு நாள் அரசுமுறை வருகையை மேற்கொண்டு நேற்று மலேசியா வந்தடைந்தார்.கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று அதிபராகப் பதவியேற்ற பின்னர் மலேசியாவுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் வருகை இதுவாகும்.

வர்த்தக விமானமொன்றின் மூலம் மாலை 5.25மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கோல்ஐஏ) முதல் முனையத்தை வந்தடைந்த ஒஸ்மானியை பூங்கா ராயா கொம்பிளெக்ஸ் கட்டடத் தொகுதியில் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் வரவேற்றார்.அதன் பின், அரச
ராணுவத்தின் முதல் படைப் பிரிவைச் சேர்ந்த 28 அதிகாரிகளும் வீரர்களும் நல்கிய மரியாதை அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.

பிரதமர் அன்வாருடன் ஒஸ்மானி இன்று பெர்டானா புத்ராவில் இருவழிச் சந்திப்பை நடத்துவார் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.வர்த்தகம், முதலீடு, கல்வி, மக்கள் கருத்துப் பரிமாற்றம் உட்பட பல்வேறு துறைகளில் இருவழி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று அது குறிப்பிட்டது.

கொசோவோவை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று மலேசியா அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. முறையான அரச,தந்திர உறவுகள் 2011ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது.

Presiden Kosovo, Dr. Vjosa Osmani tiba di Malaysia untuk lawatan rasmi empat hari. Ini lawatan pertama sejak dilantik. Beliau akan bertemu Perdana Menteri Anwar bagi membincangkan kerjasama dua hala dalam bidang perdagangan, pendidikan, pelaburan dan pertukaran rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *