குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்! புத்ராஜெயாவில் பரிதாபம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 6: புத்ராஜெயா 17வது பிரிவின் மேம்பாலம் அருகே உள்ள குளத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.

இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 5.12 மணிக்கு பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு முதற்கட்ட தகவல் கிடைத்ததாக புத்ரஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமது கூறினார்.

அந்த வழியாகச் சென்றவர்கள் அச்சிறுவனை மீட்டு  புத்ரஜெயா மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், அச்சிறுவன் இறந்ததை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தனது இரண்டு நண்பர்களுடன் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஐடி ஷாம் கூறினார்!

Seorang budak lelaki berusia 12 tahun ditemui lemas di sebuah tasik berhampiran jejambat Presint 17, Putrajaya. Dia dilaporkan berenang bersama dua rakannya sebelum kejadian dan disahkan meninggal dunia di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *