ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வெளியிட்ட வேதனையான அறிக்கை!

- Muthu Kumar
- 10 May, 2025
ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஒருவழியாக அதை ஓரம் கட்டிய ஜெயம் ரவி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டு வந்தார். அனைத்திற்கும் பாடகி கெனிஷா தான் காரணம் என்று அப்போது பேசப்பட்டது.
இந்த நிலையில் ஆர்த்தி இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் என்ன சொல்கிறார் என்றால் என் குழந்தைகளுக்காக மௌனத்தைக் கலைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நான் மௌனமாக இருக்கக் காரணம் என் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை தான். என் மீது சுமத்தப்பட்ட பழிச்சொற்களை மௌனமாகவே தாங்கினேன். அதற்குக் காரணம் குழந்தைகளுக்கு தந்தை, தாய் இருவரில் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் என்றும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும்,நாடகங்களும் வேறு. நடந்த உண்மை என்பது வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டு இருக்கிறது. 18 வருடமாக நான் காதலுடன் நம்பிக்கையுடன் இருந்த மனிதன் என் கைகளை மட்டுமல்ல. பொறுப்பில் இருந்தும் கைகழுவி விட்டார். பல மாதங்களாக குழந்தைகளின் பொறுப்பை சுமந்து வருகிறேன்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்கிறேன். அவரது புதிய உறவால் பழைய உறவு இப்போதும் வெறும் செங்கல் சுவராகவே அவருக்குத் தெரிகிறது. என்னை பணத்தாசைப் பிடித்தவள் போல சித்தரிக்கிறார்கள். நான் நினைத்து இருந்தால் எப்போதோ சுயநலத்துடன் என் பாதுகாப்பைக் கவனித்து இருப்பேன்.
என் குழந்தைகளுக்கு அன்பும், அக்கறையும் கொடுப்பேன் என்ற வாக்குறுதி பறந்து விட்டது. ஆனால் கணக்குப் போட்டு வாழ்வதை விட காதலுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவெடுத்தேன். அதனால் தான் இந்த நிலையில் இருப்பதாக ஆர்த்தி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *