போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Apr, 2025
ஏப்ரல் 30
தலைநகர் Jalan Sultan Ismail சாலையில் அமைந்துள்ள 2 வணிகத்தலங்களைச் சோதனையிட்டதில் போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பலையும் சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் கும்பலையும் தேசிய குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. சோதனையின் போது RM 2,400 ரொக்கமும் போலி ஆவணங்களும் வளாகத்தில் இருந்த 4 வெளிநாட்டினர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட வளாகத்திலிருந்து 48 Bangladesh பாஸ்போர்ட்கள், 2 இந்திய பாஸ்போர்ட்கள், 6 இந்தோனேசிய பாஸ்போர்ட்கள், 2 பாக்கிஸ்தான் பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களை மலேசியாவுக்குள் கொண்டு வர தலா RM1,000 முதல் RM2,000 வரையில் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் Bangladesh நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
Jabatan Imigresen menumpaskan sindiket pemalsuan pasport dan kemasukan haram warga asing di dua premis Jalan Sultan Ismail, Kuala Lumpur. Empat warga asing ditahan bersama wang tunai RM2,400 dan puluhan pasport palsu dari pelbagai negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *