பாரிசானுக்கு ஒன்னும் தெரியாது! நேர்மையில்லாத வெற்றி! – பாஸ் கட்சி சாடல்!

top-news

ஏப்ரல் 28,

Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் நேர்மையாகப் போட்டியிட்டிருந்தால் வெற்றிப் பெற்றிருக்க முடியாது என பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Datuk Idris Ahmad தெரிவித்தார். பாரிசானுக்கு ஒன்றும் தெரியாது. தேர்தலுக்கானச் சூட்சமம் கூட தெரியாத பாரிசானின் தொடர் வெற்றிக்குப் பின்னிருந்து இயக்கும் சக்தியாக அரசாங்கம் இருக்கிறது என Datuk Idris Ahmad தெரிவித்தார். தேர்தல் என்பது இரு கூட்டணி கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட வேண்டியது. ஆனால் சமீபக்காலமாக நடத்தப்படும் இடைத்தேர்தல்களில் பாஸ் கட்சி அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிடுவதாக Datuk Idris Ahmad தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசு நிறுவனங்கள் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவதும் அரசு உதவி நிதிகள் வழங்கப்படுவதும் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் ஒரு நேர்மையற்ற செயல் என Datuk Idris Ahmad குற்றம் சாட்டினார். சுத்தமானத் தேர்தலுக்காகக் குரல் கொடுத்த பக்காத்தான்காரர்களும் இப்போது கூட்டு சேர்ந்து அரசு நிறுவனங்களின் முக்கிய திட்டங்களையும் இலவச நிலங்களையும் மானிய விலையிலானப் பொருள்களையும் வழங்குவதாக Datuk Idris Ahmad தெரிவித்தார். இது நேர்மையானத் தேர்தலாக இருந்திருந்தால் இந்த வெற்றி நேர்மையான வெற்றியாக இருந்திருக்கும் என Datuk Idris Ahmad தெரிவித்தார்.

PAS mendakwa kemenangan Barisan di Ayer Kuning tidak jujur, dengan sokongan tersembunyi daripada kerajaan. Datuk Idris Ahmad menuduh penggunaan agensi kerajaan dan bantuan kewangan untuk menarik undi sebagai amalan pilihan raya tidak beretika.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *