தேர்தல் ஆணையத்தின் மீது பாஸ் கட்சி காட்டம்!

- Sangeetha K Loganathan
- 28 Apr, 2025
ஏப்ரல் 28,
இடைத்தேர்தல்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவதைத் தேர்தல் ஆணையமான SPR வேடிக்கை பார்த்து வருவதாகப் பாஸ் கட்சியின் துணைத்தலைவர் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். ஆயேர் கூனிங் இடைத்தேர்தலில் 58.07 விழுக்காடு வாக்கு மட்டுமே பதிவானத்திற்கு யார் பொறுப்பேற்பது எனும் கேள்வியையும் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man முன்வைத்துள்ளார். தேர்தல் நாளன்று வாக்காளர்களுடன் கட்சியைச் சார்ந்தவர்கள் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்பதால் வாக்காளர்களை நாங்களா வாக்குச்சாவடிக்குக் கூட்டி வர முடியும்? இது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. தொடர்ந்து நடத்தப்படும் இடைத்தேர்தல்களில் 70 விழுக்காடு வாக்குகள் கூட பதிவாகாமல் இருப்பது பாஸ் கட்சியின் வெற்றிக்குத் தடையாக இருப்பதாக Dato’ Sri Tuan Ibrahim Tuan Man வருத்தம் தெரிவித்துள்ளார்.
மக்களின் உணர்வுகள் தேர்தலில் வெளிப்பட வேண்டும். ஆனால் பலரும் வாக்கு செலுத்த வராமல் இருக்கின்றனர். வாக்கு செலுத்தும்படி மக்களுக்கான விழிப்புணர்வையும் வாக்கு செலுத்துவதின் முக்கியத்துவத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வெறுமனே தேர்தலை நடத்துவது மட்டும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு அல்ல என்பதையும் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார்.
PAS menuduh SPR tidak serius menangani isu kejatuhan peratusan keluar mengundi dalam pilihan raya kecil. Tuan Ibrahim menegaskan SPR perlu mengambil langkah proaktif meningkatkan kesedaran pengundi, bukan sekadar menguruskan pilihan raya sahaja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *