மோட்டார் சைக்கிளை மோதிய கார்! வயதான தம்பதியர் இருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயதான தம்பதியர் இருவரும் உயிரிழந்தனர். நேற்று காலை 10.30 மணியளவில் விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Kuala Kangsar மாவட்டக் காவல் ஆணையர் Heisham Harun தெரிவித்தார்.
ஈப்போவிலிருந்து தைப்பிங் செல்லும் சாலையான Padang Rengas சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த முதியவர்கள் இருவரும் தம்பதியர் என்றும் ஒருவர் 68 வயது Amir Sharifuddin 65 வயது Harirah Mahmud என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டை இழந்த Toyota Yaris ரக வாகனம் மோட்டார் சைக்கிளைப் பின்னாலிருந்து மோதியதாகவும் வாகனத்திலிருந்த இருவர் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகவும் Kuala Kangsar மாவட்டக் காவல் ஆணையர் Heisham Harun தெரிவித்தார்.
Toyota Yaris yang hilang kawalan melanggar sebuah motosikal di Padang Rengas, menyebabkan pasangan warga emas maut di tempat kejadian. Polis Kuala Kangsar mengesahkan mangsa ialah Amir Sharifuddin, 68, dan Harirah Mahmud, 65, manakala pemandu kereta terselamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *