கொடுமைப்படுத்தப்பட்ட 16 வெளிநாட்டுச் சிறுவர்கள் மீட்பு! 20 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 09 May, 2025
மே 9,
சிலாங்கூரில் வெளிநாட்டுச் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 16 வெளிநாட்டுச் சிறுவர்கள் மீட்கப்பட்டதாகப் புக்கிட் அமான் தலைமை உதவி இயக்குநர் Soffian Santong தெரிவித்தார். மீட்கப்பட்ட 16 சிறுவர்களும் 16 முதல் 17 வயதினர் என தெரிய வந்துள்ளது.
.வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட குறைந்த வயதுள்ள சிறுவர்களை அடிமையாக வேலை வாங்கும் கும்பலைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மீட்கப்பட்ட 16 சிறுவர்களும் மியன்மார் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து ரவாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் வேலை செய்து வந்ததாகவும் Soffian Santong தெரிவித்தார்.
Pihak polis Bukit Aman menyelamatkan 16 remaja warga asing berumur 16 hingga 17 tahun yang dipercayai dipaksa bekerja di restoran di Rawang. Seramai 20 individu ditahan kerana disyaki terlibat dalam sindiket pemerdagangan manusia dari Myanmar dan Indonesia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *