RM 5,000 லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது! – SPRM

- Sangeetha K Loganathan
- 06 May, 2025
மே 6,
கடற்கரை பாதுகாப்பு மீட்பு ஆணையமான SMART துறையின் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக நேற்று லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடற்கரை நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு கும்பலிடமிருந்த் 40 வயதுடைய அந்த அதிகாரி RM 5,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 11 மணிக்குச் சிலாங்கூரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அதிகாரியை மே 10 ஆம் தகதி வரையில் 5 நாள்கள் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கும்படி ஷா அலாம் Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது, கடந்த பிப்ரவரி மாதம் சம்மந்தப்பட்ட கடற்கரை பாதுகாப்பு மீட்பு ஆணையமான SMART துறையின் அதிகாரி இந்த குற்றத்தைப் புரிந்திருப்பதாகச் சந்தேகிக்கும் நிலையில் மேலதிக விசாரணையை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ளும் என சிலாங்கூர் SPRM இயக்குநர் Hairuzam Mohmad Amin@Hamim தெரிவித்தார்.
Seorang pegawai SMART ditahan SPRM selepas disyaki menerima rasuah RM5,000 daripada satu kumpulan yang terlibat dalam operasi pantai. Lelaki berusia 40 tahun itu ditahan di Selangor dan kini direman lima hari untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *