கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்! - 10 பேர் கைது

- Sangeetha K Loganathan
- 10 May, 2025
மே 10,
சிரம்பானில் 17 வயதுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டது தொடர்பாகத் தாக்குதலை நடத்திய 10 இளைஞர்களைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். சிரம்பானில் உள்ள KAMPUNG SENTOSA JAYAவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அந்த மாணவரை ஒரு கும்பல் தாக்கியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
17 வயது இளைஞரைத் தாக்கியதாக நம்பப்படும் 10 உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 31 வயதுக்குற்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் 17 வயது இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
Seorang pelajar lelaki berusia 17 tahun dipukul dengan kejam di padang Kampung Sentosa Jaya, Seremban. Sepuluh suspek tempatan berusia antara 17 hingga 31 tahun telah ditahan polis dan siasatan masih dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *